Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

ஜூன் 21ம் தேதி யோகா தினம்; சிறப்பாக கொண்டாட கவர்னர் மாளிகை தீவிரம்

ADDED : ஜூன் 17, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
சென்னை : அண்ணா பல்கலையுடன் இணைந்து, சர்வதேச யோகா தினத்தை, வரும் 21ம் தேதி கொண்டாட, கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்து உள்ளது.

இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை:


வரும் 21ம் தேதி, 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளில், 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், மக்கள் அனைவரும், யோகா பயிற்சிகளில் முழு மனதுடன் பங்கேற்று, முழுமையான ஆரோக்கியம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பை வலுப்படுத்த வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலையுடன் இணைந்து, 2025ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்விற்காக, பல்வேறு நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினை கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளிலும், கவர்னர் மாளிகை பங்கேற்பை ஏற்படுத்த உள்ளது.

இதற்காக, ஒரு பிரத்யேக இணையவழி சேவையை, கவர்னர் மாளிகை துவக்கி உள்ளது. இதில் பங்கேற்போர், https://events.annauniv.edu/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு 70102 57955, 044 - 2235 7343, 044 - 2235 1313 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us