பெங்களூரு தமிழ் சங்கத்தில் நாளை திருமண மேடை
பெங்களூரு தமிழ் சங்கத்தில் நாளை திருமண மேடை
பெங்களூரு தமிழ் சங்கத்தில் நாளை திருமண மேடை
ADDED : பிப் 10, 2024 06:12 AM
ஹலசூரு: பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் திருமண மேடையின், 151வது நேர்காணல் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது.
பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், 2002 முதல், திருமண மேடை நடத்தப்படுகிறது. பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் திருமண பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர்.
பதிவு செய்தோர் மேலும் பயன் பெறும் வகையில், ஆறு வாரங்களுக்கு ஒரு முறை சங்கத்தில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது, பதிவு செய்த ஆண் மற்றும் பெண் மேடையில் அறிமுகம் செய்யப்படுவர்.இது குறித்து, சங்க தலைவர் கோ.தாமோதரன், செயலர் மு.சம்பத் வெளியிட்ட அறிக்கை:
சங்கத்தின் திருமண மேடையின் 151-வது நேர்காணல் நிகழ்ச்சி நாளை காலை 10:30 மணிக்கு, சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடக்கிறது. தமிழ் ஆர்வலர் தங்கம் தம்பதி, நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளனர்.
நாளை பதிவு செய்யும் அனைவரும், அன்றே அறிமுகப்படுத்தப்படுவர். கூடுதல் விபரங்களுக்கு சங்க தொலைபேசி எண்: 080 25510062ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.