PUBLISHED ON : பிப் 10, 2024

இந்திய பொறியாளர்களின் தந்தை என்ற போற்றுதலுக்கு உரியவர் விஸ்வேஸ்வரய்யா. கர்நாடகா மாநிலம், முட்டஷ்னஹள்ளியில், பிறந்தார். பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று, அரசு பணியில் சேர்ந்தார். மிகப்பெரும் திட்டங்களை நிறைவேற்றினார்.
ஆசியாவில் பெரிய நீர்தேக்கங்களில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரபல ஆன்மிக தலமான திருமலை தேவஸ்தானத்திற்கு, திருப்பதியில் இருந்து சாலை அமைக்கும் பணியை நிறைவேற்றினார். மைசூரு அருகே சிவ சமுத்திரத்தில், நீர்மின் உற்பத்தி நிலையம் அமைத்தார்.
அரசு பணியில் நேர்மையை கடைபிடித்தவர். அலுவலக உபயோகத்திற்கு மட்டும் அரசு வாகனத்தைப் பயன்படுத்தினார். உடன் பணியாற்றியவர்களை சமமாக மதித்தார். கங்கை ஆற்றில் பாலம் கட்டும் பணியை இவரிடம் ஒப்படைத்தார் அப்போதைய பிரதமர் நேரு. அதை மிக நேர்த்தியாக நிறைவேற்றினார்.
வேளாண் துறை வளர்ச்சிக்கு தானியங்கி மதகு உருவாக்கினார். இது மகத்தான கண்டுபிடிப்பாக போற்றப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புக்கு உரிய ராயல்டி தொகை தர முன் வந்தது அரசு. அதை பெருந்தன்மையுடன் மறுத்து விட்டார்.
உன்னதமாக வாழ்ந்து, பெரும் பணிகளை நிறைவேற்றிய விஸ்வேஸ்வரய்யாவுக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. நலமுடன், 101 ஆண்டுகள் வாழ்ந்தார்.
இந்த ஆயுள் ரகசியம் பற்றி கேட்ட போது, 10 பொன்மொழிகள் கூறினார். அவை...
* வயிறு, 50 சதவீதம் நிரம்பும் அளவு மட்டுமே அன்றாடம் உண்ண வேண்டும்; 25 சதவீதம் தண்ணீர் குடிக்க வேண்டும்; மீதி, 25 சதவீதம் வயிறு காலியாக இருக்க வேண்டும்
* உதட்டில் எப்போதும் புன்னகை தவழ்ந்தபடி இருக்க வேண்டும்
* கட்டாயமாக, எட்டு மணி நேரம் துாங்க வேண்டும்
* மனச்சாட்சியின் குரலுக்கு மதிப்புத் தந்து நடக்க வேண்டும்
* பிறரை மகிழ்வித்து, மகிழ வேண்டும்
* சம்பாதிக்கும் பணத்தில் மட்டுமே தேவையை நிறைவேற்ற பழக வேண்டும்
* சேமிப்பை முதன்மை நிலையில் வைத்திருக்க வேண்டும்
* குடும்பத்தினருடன் இணக்கமாய் இருக்க வேண்டும்
* பேரன் - பேத்தியருடன் விளையாட வேண்டும்
* வாழ்வதற்கு உரிய லட்சியம் வேண்டும். அதை முன் வைத்து, கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்த பொன்மொழிகளை கடைபிடித்தால், நல்ல உடல் நலம், புகழுடன் வாழலாம்.
கர்நாடகா மாநிலத்தில் விஸ்வேஸ்வரய்யா நினைவைப் போற்றும் வகையில், அவர் பெயரில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் புகழை அது பறை சாற்றுகிறது!
- தங்க.சங்கரபாண்டியன்