Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

PUBLISHED ON : பிப் 10, 2024


Google News
Latest Tamil News
வண்ணங்கள் சொல்லும் கதை

வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன. அவை, ஊதா, கருநீலம் என்ற இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு. இந்த நிறங்களின் கலவை தான் சூரிய ஒளி என்ற பேராற்றலாக ஜொலிக்கிறது. பிரமிட் வடிவ கண்ணாடியில் சூரிய ஒளி விழும் போது, ஏழு வண்ணங்களையும் பிரித்து காட்டும். இதை, நிறப்பிரிகை என்பர்.

மனித வாழ்வில் நிறங்களுக்கு முக்கியப்பங்கு இருப்பதாக உளவியல் துறை உரைக்கிறது. அவை எண்ணங்களில், உணர்வுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவர் விரும்பும் நிறமே அவரது குண நலன்களை காட்டும் என்பது நிபுணர்கள் கருத்து.

சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகியவையே அடிப்படையாக உள்ள நிறங்கள். இவற்றுடன், வெண்மை, கருமை, சாம்பல், ஆரஞ்சு, ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.

நிறங்களுக்கு உரிய சிறப்பியல்புகள் குறித்து பார்ப்போம்...

பச்சை: பசுமை சமநிலையையும் சூழல் அமைதியையும் குறிக்கிறது. இந்த நிறத்தை கண்டவுடன், மனம் புத்துணர்ச்சி அடையும். கண்களில் உள்ள லென்ஸ், பார்க்கும் ஒவ்வொரு நிறத்தின் அலைவரிசைக்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.

ஆனால், பச்சை நிறத்திற்கு மட்டும் அப்படி தகவமைக்க தேவையில்லை என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வான வில்லின் நடுவில் அமைந்துள்ள இந்த நிறம் ஓய்வு நிலை மற்றும் செழிப்பை குறிக்கவும் பயன்படுகிறது.

நீலம்: குளிர்ச்சி தரும் நிறமாகக் கருதப்படுகிறது. அறிவுத்திறன், நம்பிக்கை, தர்க்க ரீதியான செயல்பாட்டை குறிக்கிறது. மனதிற்கு இதமளிப்பதாக கருதப்படுகிறது. ஆழ்ந்த நீலம், எண்ண ஓட்டத்தை சீராக்கி, சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது. இளம் நீலம், மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது.

இந்த நிறம் அதிக அலை நீளமுள்ளது. தொலைவில் நீல நிறப்பொருட்கள் இருந்தால் கண்ணுக்கு தெரியாது. இதனால் தான் போக்குவரத்து சிக்னலில் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. இந்த நிறத்தின் அதிக அலை நீளம் தான், வானத்தை நீலமாகத் தோன்ற வைக்கிறது. உலகம் முழுதும் அதிகம் பேர் இந்த நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சிவப்பு: வலிமையின் நிறம் சிவப்பு. துணிச்சல், ஆற்றலை குறிப்பதாக கருதப்படுகிறது. தீவிர மன உணர்வை துாண்டி விடுகிறது. அறையில் சிவப்பு வண்ணப் பொருள் இருந்தால் முதலில் கவனத்தை ஈர்க்கும்.

எனவே தான், போக்குவரத்து சிக்னல், அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை போன்றவற்றில் சிவப்பு நிறமே பயன்படுகிறது.

மஞ்சள்: இதுவும் உணர்வுப்பூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்கப்பூர்வ சிந்தனை, நட்புணர்வு போன்றவற்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. சிவப்பு நிறம் போலவே வலிமையை கூட்டும் தன்மை மஞ்சளிலும் உள்ளது. உத்வேகத்தையும் அதிகரிக்கும். ஆனால், அளவுக்கதிகமான மஞ்சள் நிறம் தவறான எண்ணத்தை தரும். சில வண்ணங்களுடன் மஞ்சள் சேர்ந்தால் பதற்றம், பயம் உண்டாக காரணமாகி விடும்.

ஊதா: ஆன்மிக உணர்வுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நிறைவு, சொகுசு, தரம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் உள்ளது. ஆழ்நிலை தியானத்திற்கு உதவுகிறது. சீரான சிந்தனை, ஆழ்ந்த அமைதியை ஊக்குவிக்கிறது.

வானவில்லின் கடைசியாக இருக்கும் நிறம் இது. காலம், வெளி மற்றும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதிகமாக ஊதா நிறத்தை பயன்படுத்தினால் தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம், வெளிப்படை தன்மையின்மை போன்ற விளைவுகள் ஏற்படும் என உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆரஞ்சு: செயல்களை துாண்டும் நிறம் இது. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடாக உள்ளது. சிவப்பு, மஞ்சள் வண்ண கலவையால் உருவாகிறது.

மிகுந்த சோர்வாக உணரும் போது ஆரஞ்சு வண்ண உடை அணியலாம். சோர்வு அகலும். அடர்த்தியான ஆரஞ்சு வண்ணம் பலவீனம் ஏற்படுத்தி விடும்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us