PUBLISHED ON : பிப் 10, 2024

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 5
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
கடுகு, இஞ்சி, நல்லெண்ணெய், மஞ்சள் துாள், கறிவேப்பிலை, உப்பு, புளி - தேவையான அளவு.
செய்முறை:
கத்தரிக்காயை தீயில் வாட்டி, தோல் நீக்கி அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, ஆறியதும் உப்பு கலந்து அரைக்கவும்.
பின், நல்லெண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் தாளித்து, அரைத்த கத்தரிக்காய் மற்றும் கலவை சேர்த்து வதக்கவும். சுவையான, 'கத்தரிக்காய் சட்னி' தயார். சத்துக்கள் உடையது. இட்லி, தோசை, சாதத்துக்கு பக்க உணவாக பயன்படுத்தலாம்!
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.