/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கைமாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை
மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை
மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை
மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
திருப்பூர் : தங்கபாலு விலகியதால், அடுத்த தலைவரை நியமிக்க காங்., தலைவரிடம் வலியுறுத்துவது என, கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாநகர காங்கிரஸ் வார்டு தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம், திருப்பூரில் நடந்தது; கமிட்டி தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் ஜெயா, கவுன்சிலர் ராதாமணி முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மாநகர, மாவட்டத் தலைவரை காங்., கமிட்டி பொது செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் மட்டுமே நியமிக்க முடியும்; அதை மட்டுமே ஏற்று கொள்ள முடியும்; மற்ற நியமனங்கள் செல்லாது. மாநகராட்சி 60 வார்டுகள் முறையாக விரிவுபடுத்தப்படவில்லை; 39 மற்றும் 40வது வார்டுகள் இணைத்து 31 வது வார்டு உருவாக்கப்பட்டுள் ளது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், கவுன் சிலர் பணியை சரிவர செய்ய இயலாது. எனவே மறுபரிசீலனைக்கு இடமளிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது; விரைவில் தமிழகத்துக்கு காங்., மாநில தலைவரை நியமிக்க, காங்., தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைப்பது; 150 நாட்களாக மூடிக்கிடக்கும் சாய ஆலைகளை திறக்க வலியுறுத்தி, கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், தெற்கு வட்டார தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.