Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஏர்போர்ட்ல ஒரு காட்சி அன்பிற்கு இதுவே சாட்சி!

ஏர்போர்ட்ல ஒரு காட்சி அன்பிற்கு இதுவே சாட்சி!

ஏர்போர்ட்ல ஒரு காட்சி அன்பிற்கு இதுவே சாட்சி!

ஏர்போர்ட்ல ஒரு காட்சி அன்பிற்கு இதுவே சாட்சி!

ADDED : பிப் 10, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
வெளிநாட்டு பயண பரபரப்பில் பயணிகள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்க, அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அங்கு ஒரு சம்பவம். தன்னந்தனியே கூட்டத்துக்குள் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்தோடிய அந்த முசுமுசு நாய்க்குட்டி, வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்திறங்கி நடந்து வந்த இளம்பெண்ணின் மீது தாவி தோளில் ஏறியது. வாஞ்சையுடன் அவர் மார்போடு வாரி அணைத்து முகத்தோடு முகம் புதைத்து முத்தமிட, வாலை ஆட்டியவாறே அதுவும் கொஞ்சி குலாவி முத்தமழை பொழிந்தது. அனைவருக்கும் ஆச்சரியம். ஒருவரை ஒருவர் பார்த்து பார்வைகளால் வியப்பை பரிமாறிக்கொண்டனர். இந்தக்காட்சி கேரள மாநிலம் கொச்சி ஏர்போர்ட்டில்... அந்த இளம்பெண், அவந்திகா. பாய்ந்தோடிய பாசக்கார நாய்க்குட்டி, சிட்சூ!

இதை தனது செல்லப்பிராணிக்கான, 'பிரவுனி வூப்ஸ்' என்ற இன்ஸ்ட்டா தனிப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், அவந்திகாவின் சகோதரி நந்தனா. இவர் தற்போது, லண்டனில் வசிக்கிறார். அவந்திகா சொந்த ஊருக்கு திரும்பியபோது நடந்த வியத்தகு காட்சி தான் கொச்சின் ஏர்போர்ட்டில் நடந்தது...

நந்தனா கூறுகையில்...

எங்கள் அப்பா பிரேம்குமார் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட ஜி.எஸ்.டி., துணை கமிஷனராக உள்ளார். அம்மா ரஜனி வீட்லதான் இருக்காங்க. நான், சகோதரி... என, மொத்தமே நாலு பேர் கொண்ட பேமிலி. எங்கள் உலகத்துக்குள் 35 நாள் குழந்தையாக வந்தான் பிரவுனி. இப்போ அவனுக்கு இரண்டரை வயசு. குட்டியா அழகான கண்களோட, எப்போவும் சுத்தி சுத்தி வர்ற பிரவுனியோட சேட்டைகளை பதிவு செய்றதுக்கு தான், 'இன்ஸ்ட்டாகிராம் பேஜ்' உருவாக்கினேன். இவனை பார்த்தாவே பாசிட்டிவ் வைப் வரும். இப்போ, நான் கனடால இருக்கேன்.

ஆனா, சி.சி.டி.வி., கேமரா மூலமா தினமும் பிரவுனிய பார்த்துக்கிட்டு, பேசிக்கிட்டு இருக்கேன். பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், என்னோட குரல் கேட்டாலோ, என் பேர சொன்னாவோ, உடனே உடம்பை சிலிப்பிக்கிட்டு தேட ஆரம்பிச்சிடுவான். ரொம்ப பொசசிவ்வா இருப்பான். அவன பாத்தாவே, எவ்ளோ ஸ்ட்ரஸ் இருந்தாலும், இன்ஸ்ட்டன்ட்டா சந்தோஷம் வந்துடும்,'' என்றார்.

எதையாவது எதிர்பார்த்தே பழகுற மனுஷங்க மத்தியில, எவ்வித எதிர்பார்ப்புமே இல்லாம அன்பு செலுத்துறதும், அடித்தாலும் விலகாமல் திரும்ப ஓடிவந்து ஒட்டிக்கொள்வதும் செல்லப்பிராணிதாங்க... அந்த 'லவ்'தாங்க நமக்கு வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us