/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆண்டாள் கோயில் சிலை கொடி மரங்கள் மாயம் * கவர்னருக்கு புகார்ஆண்டாள் கோயில் சிலை கொடி மரங்கள் மாயம் * கவர்னருக்கு புகார்
ஆண்டாள் கோயில் சிலை கொடி மரங்கள் மாயம் * கவர்னருக்கு புகார்
ஆண்டாள் கோயில் சிலை கொடி மரங்கள் மாயம் * கவர்னருக்கு புகார்
ஆண்டாள் கோயில் சிலை கொடி மரங்கள் மாயம் * கவர்னருக்கு புகார்
ADDED : பிப் 10, 2024 04:21 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து யானை சிலைகள், கொடி மரங்கள் மாயமான சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக கவர்னருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கவர்னர் ரவிக்கு அனுப்பிய புகாரில்,
இக்கோயிலில் யானை சிலைகள் மற்றும் பழைய கொடி மரங்கள் காணாமல் போனது குறித்து, இதற்கு முன்பு கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலர்கள், கோயில் அனைத்து நிலை ஊழியர்கள், அர்ச்சர்கள், கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.