ADDED : பிப் 10, 2024 12:41 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், ராக்கியாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுமதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். ஆசிரியை சரண்யா கடந்தாண்டு செயல்பாடுகள் குறித்த அறிக்கை வாசித்தார்.
திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் மதிவாணன், சுஜினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கவனம் ஈர்த்தன.
இவற்றை ஆசிரியர்கள் அனுராதா, அர்ச்சனா, செந்தில்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். ஆசிரியை பாஞ்சாலி நன்றி கூறினார்.