/உள்ளூர் செய்திகள்/வேலூர்/தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலுதமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு
தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு
தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு
தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு
ADDED : பிப் 10, 2024 04:36 PM
வேலுார் : ''தமிழகத்தில், 48 ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வேலுாரில், அவர் நேற்று கூறியதாவது:வேலுார் சி.எம்.சி., எதிரில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, மதுரை, சேலம், போன்ற இடங்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வேலுாரில் நெரிசல் உள்ள பகுதிகளில், மேம்பாலம் அமைக்க வேண்டுமானால், கடைகள், பெரிய கட்டடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செய்தால், அரசு மீது வெறுப்புணர்வு வர வாய்ப்புள்ளது. வியாபாரிகள், மக்களுக்கு தொல்லை இல்லாமல் அமைக்க சாத்தியக்கூறு இருந்தால், மேம்பாலம் அமைக்கப்படும். தமிழகத்தில், 48 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.