/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழையால் உயரத் துவங்கியது கொப்பரை விலைமழையால் உயரத் துவங்கியது கொப்பரை விலை
மழையால் உயரத் துவங்கியது கொப்பரை விலை
மழையால் உயரத் துவங்கியது கொப்பரை விலை
மழையால் உயரத் துவங்கியது கொப்பரை விலை
பொள்ளாச்சி : மழையால் கொப்பரை உற்பத்தி பாதித்ததால், வெளி மார்க்கெட்டில் விலை உயரத் துவங்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு, 54 - 55 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,200, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 90 ரூபாய், விவசாயிகள் சொந்தப் பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு, 14 ஆயிரம் முதல் 14 ஆயிரத்து 500 ரூபாய் வரை கிடைத்தது. விவசாயிகள் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய்க்கு 8.50 ரூபாய், வியாபாரிகள் சொந்தப் பொறுப்பில் பறித்துக் கொள்ள, தேங்காய்க்கு 8 ரூபாய் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் இருந்து சென்னை உட்பட பிற பகுதிகளுக்கு உணவுத் தேவைக்கு அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 13 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது; வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெயில் கலப்படத்தை தடுத்தால், தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை மேலும் உயரும். தேங்காய் சீசன் நிறைவடையும் நிலையில், விலை சரிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.