ADDED : பிப் 10, 2024 05:17 AM
மதுரை: கல்வித்துறை சார்பில் நடந்த மாநில கலைத் திருவிழா போட்டியில் சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தோற் பாவைக் கூத்து குழு பிரிவில் முதலிடம், தனிநபர், பாவனை நடிப்பு போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்று சாதித்தனர்.
போட்டிகளில் சாதித்த பிளஸ் 1 மாணவர்கள் ராஜலட்சுமி, பீமாலட்சுமி, கற்பகலட்சுமி, லத்திகா தேவி, அஷ்டலட்சுமி, கோசின், போட்டிக்கு தயார்படுத்திய ஆசிரியர் சிவா ஆகியோரை மதுரை சி.இ.ஓ., கார்த்திகா பாராட்டினார்.
டி.இ.ஓ., (இடைநிலை) சாயிசுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து முனியப்பன். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, சேடபட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தலைமையாசிரியர் செந்தில்வேல் பங்கேற்றனர்.