/உள்ளூர் செய்திகள்/தேனி/பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தேவாரம் வளர்ச்சி பணி பாதிப்புபேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தேவாரம் வளர்ச்சி பணி பாதிப்பு
பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தேவாரம் வளர்ச்சி பணி பாதிப்பு
பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தேவாரம் வளர்ச்சி பணி பாதிப்பு
பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தேவாரம் வளர்ச்சி பணி பாதிப்பு
ADDED : பிப் 10, 2024 05:51 AM
தேவாரம்: தேவாரம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
தேவாரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தேவாரம் பகுதி வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 6 மாதங்களாக பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள சின்னச்சாமி பாண்டியன் என்பவர் தேவாரம் பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலராக உள்ளார். தேவாரம் பேரூராட்சிக்கு அலுவலக சம்பந்தமாக வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருகிறார். 6 மாதங்களாக பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம் இல்லாததால் பேரூராட்சி பகுதியில் அன்றாட திட்ட பணிகள், ரோடு, சிறுபாலம், பேவர் பிளாக், குடிநீர் குழாய் இணைப்பு, வரி விதிப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தல், புதிய வீடுகளுக்கான பிளான் அப்ரூவல், வரைபடம், கட்டடங்களை பார்வையிட்டு வரி விதிப்பு வழங்குதல், குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், பிறப்பு. இறப்பு சான்று திருத்தம் குறித்த பதிவேடுகள் சரி பார்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நேரடியாக சென்று விபரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதோடு தெருக்களில் சரிவர குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடை தூர்வாரப் படாமல் கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது.
பேரூராட்சி வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள் செய்து தருவதோடு, மக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் தேவாரத்திற்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.