நாட்டின் ஒற்றுமைக்கு கேடு அமைச்சர் ராஜண்ணா எச்சரிக்கை
நாட்டின் ஒற்றுமைக்கு கேடு அமைச்சர் ராஜண்ணா எச்சரிக்கை
நாட்டின் ஒற்றுமைக்கு கேடு அமைச்சர் ராஜண்ணா எச்சரிக்கை
ADDED : பிப் 10, 2024 11:51 PM

ஹாவேரி : ''நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில், யார் பேசினாலும் அதை நாங்கள் கண்டிப்போம்,'' என கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:
'ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' செய்திருக்காவிட்டால், இன்று பஞ்சாப் மாநிலம் நம் நாட்டில் இருந்திருக்காது. ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் செய்தது யார். இதற்காகவே இந்திரா கொலை நடந்தது.
நாட்டுக்காக பா.ஜ.,வினரின் பங்களிப்பு என்ன. இவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதில்லை என, ஆங்கிலேயருக்கு எழுதி கொடுத்த சந்ததியை சேர்ந்தவர்கள்.
நாட்டின் ஒற்றுமைக்காக, காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தியாகம் செய்தனர்; அந்த தியாகம் வீணாக கூடாது.
நாடு ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில், யார் பேசினாலும் அதை நாங்கள் கண்டிப்போம்.
நாட்டை பிரிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் கருத்தில், எனக்கு உடன்பாடு இல்லை. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, முன்னாள் பிரதமர் ராஜிவ், உயிரை தியாகம் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.