ADDED : ஜூலை 15, 2024 01:19 AM

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் என, பல்வேறு காரணங்களால் கொலைகள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை, உளவு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசாரும், ரவுடிகள் ஒழிப்பு போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆறு ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. ரவுடிகள் 244 பேர் பழிக்கு பழியாக கொல்லப்பட்டு உள்ளனர்.