/உள்ளூர் செய்திகள்/தேனி/பிரசாதம் என விஷ பாயசத்தை கொடுத்து சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனைபிரசாதம் என விஷ பாயசத்தை கொடுத்து சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
பிரசாதம் என விஷ பாயசத்தை கொடுத்து சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
பிரசாதம் என விஷ பாயசத்தை கொடுத்து சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
பிரசாதம் என விஷ பாயசத்தை கொடுத்து சிறுமியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 10, 2024 01:23 AM

தேனி:தேனி மாவட்டம், போடி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 55. இவரிடம், போடி ஜே.கே.பட்டி கீரைக்கடை சந்தையை சேர்ந்த சுரேஷ், 38, என்பவர், 2013ல், 4.70 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
ராஜ்குமார் கடனை திருப்பிக் கேட்டதால், அவரை குடும்பத்தினருடன் கொலை செய்ய சுரேஷ், அவரது கள்ளக்காதலி கீதா திட்டமிட்டனர்.
கள்ளக்காதலி
ராஜ்குமார், அவரது மனைவி செல்வி, மகள் சவுந்தர்யா, மகன்கள் கிருஷ்ண குபேந்திரன், விக்னேஷ்வரன் ஆகியோருக்கு பாயசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தனர்.
சுரேஷின் நண்பர்களான காமாட்சி, விஜயராம், கணேசன் இதற்கு உதவியதாக கூறப்படுகிறது.
கடந்த, 2013 ஜூன் 25 இரவு, 8:15 மணிக்கு சுரேஷின் கள்ளக்காதலி கீதாவின் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ராஜ்குமாரின், 11 வயது மகள் சவுந்தர்யாவை வீட்டிற்குள் சுரேஷும், கீதாவும் அழைத்து சென்றனர்.
கோவில் பிரசாதம் என கூறி, விஷம் கலந்த பாயசத்தை சவுந்தர்யாவிற்கு கொடுத்து கொலை செய்தனர்.
பின், ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி செல்வி, மகனுக்கும் விஷம் கலந்த பாயசத்தை கொடுத்தனர். அவர்கள் அதை குடித்துவிட்டு துப்பினர்.
ஆத்திரமடைந்த போடி டி.வி.கே.கே.,பகுதியை சேர்ந்த விஜயராம், 32, பாயசத்தை குடிக்க வலியுறுத்தி, செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்தார். செல்வி சத்தம் போட்டதால், அவர்கள் தப்பினர்.
விடுதலை
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ், கீதா, விஜயராம், காமாட்சி, கணேசன் ஆகிய ஐந்துபேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.
விசாரணை காலத்தில் கீதா, காமாட்சி இறந்தனர். சுரேஷுக்கு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம், விஜயராமிற்கு 10 ஆண்டுகள் சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். கணேசன் விடுதலை செய்யப்பட்டார்.