Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாசன நீரில் கை வைத்தால் அவ்ளோதான்! கோவை கலெக்டர் எச்சரிக்கை

பாசன நீரில் கை வைத்தால் அவ்ளோதான்! கோவை கலெக்டர் எச்சரிக்கை

பாசன நீரில் கை வைத்தால் அவ்ளோதான்! கோவை கலெக்டர் எச்சரிக்கை

பாசன நீரில் கை வைத்தால் அவ்ளோதான்! கோவை கலெக்டர் எச்சரிக்கை

ADDED : பிப் 09, 2024 11:50 PM


Google News
பொள்ளாச்சி:பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை, அத்துமீறி திருடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.ஏ.பி., பாசன திட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து, முதல் மண்டல பாசனத்துக்கு, வரும், 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மழைப்பொழிவு மிகக்குறைவாக உள்ள நிலையில், தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பின் அடிப்படையில், இரு சுற்றுகளுக்கு மட்டும் தண்ணீர் வழங்கும் நிலை உள்ளது.

இதனால், கடைமடைக்கு நீர் செல்ல முறைப்படுத்துவது குறித்தும், நீர் திருட்டை தடுப்பது குறித்தும், கடந்த, 8ம் தேதி கண்காணிப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், எஸ்.பி., வேளாண் இணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர், மின்வாரிய செயற்பொறியாளர்கள், நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள், கோமங்கலம், நெகமம், சுல்தான்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தற்போது, மழைப்பொழிவு குறைவாக உள்ளதாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும், நிலையான பயிர்களுக்கு இரு சுற்றுக்கு உயிர்த்தண்ணீர் வழங்கப்படுகிறது.

உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலுார் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளகோவில், குண்டடம் பகுதிகளுக்கு, பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், தண்ணீர் திருட்டை தடுக்கவும் திட்டக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரத்தை துண்டிக்கவும், அப்பகுதியில் போலீஸ், வருவாய் துறை, நீர்வளத்துறை, மின்வாரியத்தினர் இணைந்து குழு அமைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீர் திருட்டு குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கோவை கலெக்டர் எச்சரித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us