/உள்ளூர் செய்திகள்/சேலம்/13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
ADDED : பிப் 10, 2024 07:45 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில், 13.35 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது.
சேலம், கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முகாமை தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கி பேசியதாவது:
இம்முகாமில், 1 முதல், 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் (கருவுற்ற மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும், 16 அன்று நடைபெறுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் முகாம் நடைபெறுகிறது. மொத்தம், 13 லட்சத்து, 35 ஆயிரத்து, 911 பேர் பயனடைகின்றனர்.
இவ்வாறு பேசினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சி.இ.ஓ., கபீர், டீன் மணி, நலப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, சுகாதார பணிகளின் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மாநகர் நல அலுவலர் யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.