/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்
ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்
ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்
ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2011 01:07 AM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சாதுர் மாஸ்ய விரதம்
தொடங்கினார்.சாதுக்கள் என்றழைக்கப்படும் துறவிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆனி
மாதம் இறுதி வாரத்தில் உலக நன்மை வேண்டி சாதுர் மாஸ்ய விரதம் இருப்பார்கள்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஜீயராக இருப்பவர் ஸ்ரீரங்க நாராயண
ஜீயர்.
இவர் நேற்றுமுன்தினம் சாதுர் மாஸ்ய விரதம் தொடங்கினார். தண்ணீர் கூட
அருந்தாமல் உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். 48
நாட்கள் முடிந்ததும் ஸ்ரீரங்கம் ஜீயர் சித்திரை, உத்திர வீதிகளில் பட்டின
பிரவேசம் மேற்கொள்வார். இதன் பிறகு பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.