/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பிரதமர் வீடு திட்ட முறைகேடு பி.டி.ஓ., அதிரடி 'சஸ்பெண்ட்' பிரதமர் வீடு திட்ட முறைகேடு பி.டி.ஓ., அதிரடி 'சஸ்பெண்ட்'
பிரதமர் வீடு திட்ட முறைகேடு பி.டி.ஓ., அதிரடி 'சஸ்பெண்ட்'
பிரதமர் வீடு திட்ட முறைகேடு பி.டி.ஓ., அதிரடி 'சஸ்பெண்ட்'
பிரதமர் வீடு திட்ட முறைகேடு பி.டி.ஓ., அதிரடி 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 02, 2024 02:25 AM
புள்ளம்பாடி:திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதுார் ஊராட்சியில், 2019 முதல் 2022 வரை பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல், அதிகாரிகள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இறந்தவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வேறு வேறு பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும், 70 வீடுகளுக்கு முறைகேடாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட லால்குடியை சேர்ந்த உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, விசாரணை நடத்திய திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் 10 பேர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவரான, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ரவிச்சந்திரன் என்பவரை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். மே 31ல் ஓய்வு பெற இருந்த நிலையில், 30ம் தேதி இரவு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.