/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம் மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்
ADDED : ஜூன் 02, 2024 02:25 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.
அப்போது, டிராக்டரின் தண்ணீர் தொட்டி மின்கம்பியை உரசிக் கொண்டு நின்றுள்ளது. டிராக்டரை ஓட்டி வந்த முருகானந்தம், 38, டிராக்டரில் வந்த அவரது மகன் பாண்டியன், 15, ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த இருவரையும், அருகில் இருந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
செல்லும் வழியில் முருகானந்தம் உயிரிழந்தார். பாண்டியன் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.