ADDED : பிப் 10, 2024 04:15 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் உயர் மின் கோபுர விளக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து பஸ் மறியல் நடந்தது.
வத்திராயிருப்பில் நாடார் பஜாரில் அமைக்கப்பட்ட ஒரு உயர்மின் கோபுர விளக்கை அந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் முயன்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதி மக்கள் நேற்று காலை 11:30 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் முத்துமாரி, போலீஸ், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உயர் மின் கோபுரத்தை அதே இடத்தில் மீண்டும் பொருத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.