/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை தேவைமாவட்டத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை தேவை
ADDED : பிப் 10, 2024 04:58 AM

மாவட்டத்தில் முக்கிய விவசாய பூமியான இவ்வொன்றியத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மழை குறைவு காலங்களில் கூட இப்பகுதி மக்கள் போர்வெல், கிணற்று நீரைக் கொண்டு நெல், மிளகாய், கடலை, தக்காளி, கத்தரி போன்ற பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
சில வருடங்களாக காட்டு மாடுகள் தொல்லை அதிகரித்ததால் விவசாயம் பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு மாடுகள் மேல வண்ணாரிப்புக்கும் கொட்டாம்பட்டிக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் திரிகின்றன.
அவை இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து தோட்டங்களை நாசம் செய்கிறது.
புடலை, பாகை உள்ளிட்ட பயிர்களுக்காக போடப்பட்ட பந்தல்களையும் உடைத்துச் சென்று விடுகிறது. மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளும் வனத்துறையும் திணறி வருகின்றனர்.
சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் இப்பகுதியில் நிரந்தரமாக தங்கி தென்னை, கடலை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து விடுகிறது.
தென்னை மரங்களில் ஏறி தேங்காயை பறித்து தின்று விடுகிறது. கடலை செடிகளை வேரோடு பறித்து ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு அடுத்த நிலத்துக்கு சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
பழனி, விவசாயி, மேல வண்ணாரிருப்பு: இவ்வொன்றிய மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோம். ஆண்டு முழுவதும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
சில வருடங்களாக காட்டு மாடுகள், குரங்குகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. காட்டு மாடுகளை விரட்டுவதற்காக இரவு நேரங்களில் விவசாயிகள் தங்க வரும் போது பாம்பு கடிக்கு ஆளாகி பலர் இறந்துள்ளனர்.
குரங்குகளை விரட்டவே முடியவில்லை. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வனத்துறையும் வேளாண்மை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.