/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.எஸ்.எம்., கல்லுாரியில் இலக்கிய மன்றவிழாசி.எஸ்.எம்., கல்லுாரியில் இலக்கிய மன்றவிழா
சி.எஸ்.எம்., கல்லுாரியில் இலக்கிய மன்றவிழா
சி.எஸ்.எம்., கல்லுாரியில் இலக்கிய மன்றவிழா
சி.எஸ்.எம்., கல்லுாரியில் இலக்கிய மன்றவிழா
ADDED : பிப் 10, 2024 05:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் எருமனுார் சி.எஸ்.எம்., கல்லுாரியில் தமிழ்துறை இலக்கிய மன்றவிழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி நிறுவனங்களின் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தருமராசன் வரவேற்றார்.
ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், புல முதன்மையர் கவிபாண்டியன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜேசுதாஸ் ஆகியோர் பேசினர்.
புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழக செயலர் தமிழ்நெஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்துறை பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.