பயிற்சியில் பங்கேற்காவிட்டால் பட்டாசு ஆலை உரிமம் ரத்து!

UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:42 AM
சிவகாசி:
தொழிலக பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.இது குறித்து அவரது செய்திக் குறிப்பு:
சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பிப்.12 முதல் பிப்.16 வரை காலை 10:15 முதல் மாலை 5:00 மணி வரை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், மேற்பார்வையாளர்கள் தரத்தில் ஆலைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நபர்களை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து பிப்.12 காலை 10:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.பயிற்சி வகுப்பிற்கு முதல் முறை வரத் தவறினால் ரூ.5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் தண்டனை கட்டணமாக சம்பந்தப்பட்ட அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மூன்றாவது முறையாக வரத் தவறினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.