ADDED : பிப் 10, 2024 01:38 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் ஒரு வெல்டிங் பட்டறையில், கீழநத்தத்தை சேர்ந்த கண்ணையா மகன் அடைக்கலம் 18, என்பவர் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் வெல்டிங் பணிகள் நடந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். போலீசார் விசாரித்தனர்.