Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை

ADDED : செப் 02, 2025 02:08 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் எனது தாயை அவமதித்துவிட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் டில்லி இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீஹாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.

விமர்சனம் ஏன்?

என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீஹார் மக்களிடமும் உள்ளது. எனது தாய் ஆர்ஜேடி காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத தனது தாயாரை ஏன் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர். உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டு பிரிந்து இருந்தார்.

எந்த தொடர்பும்…!

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத இனி என் அம்மா, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சகோதரிகளே, தாய்மார்களே உங்கள் முகங்களை என்னால் பார்க்க முடிகிறது.

நீங்கள் உணர்ந்திருக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார். இவ்வாறு பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்.

நடந்தது என்ன?

பீஹாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின் போது, சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராகுல், பிரியங்கா மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us