/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிரதான சாலையோரம் குப்பை 'டவர்' பூங்கா அருகில் சீர்கேடுபிரதான சாலையோரம் குப்பை 'டவர்' பூங்கா அருகில் சீர்கேடு
பிரதான சாலையோரம் குப்பை 'டவர்' பூங்கா அருகில் சீர்கேடு
பிரதான சாலையோரம் குப்பை 'டவர்' பூங்கா அருகில் சீர்கேடு
பிரதான சாலையோரம் குப்பை 'டவர்' பூங்கா அருகில் சீர்கேடு
ADDED : பிப் 10, 2024 12:17 AM

அண்ணா நகர், சாலையோரத்தில் தேங்கியுள்ள குப்பை குவியலால், அண்ணா 'டவர்' பூங்கா அருகில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அண்ணா நகர், மூன்றாவது பிரதான சாலையில், அண்ணா டவர் பூங்கா செயல்படுகிறது.
இங்கு, அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூங்கா அருகில் சாலையோரத்தில், குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலாத்தலமாக விளங்கும் டவர் பூங்கா அருகில், இதுபோன்று குப்பை குவிந்து கிடப்பதால், சுற்றுலா பயணியர் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, பூங்காவைச் சுற்றிலும் தேவையின்றி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.