ADDED : பிப் 10, 2024 12:23 AM
வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, டி.பி.கே., தெருவைச் சேர்ந்தவர் நிசார் அலி, 37. இவரது மனைவி ஷர்மிளா, 29. மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால், மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நிசார் அலியை கைது செய்யக்கோரி, ஷர்மிளாவின் உறவினர்கள் மின்ட் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.