ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
ADDED : பிப் 10, 2024 07:09 AM
ஈரோடு : மாநில முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், புனரமைப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணி நடந்து வருகிறது.
இந்த வகையில் ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 2.௧௧ கோடி ரூபாய் மதிப்பில், ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு நேற்று அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், மாநிலங்களவை எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சரஸ்வதி, ஹிந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு ஈரோடு மாவட்ட தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து சென்னிமலையில், 93 லட்சம் ரூபாய் மதிப்பில் பசு மடம் கட்டும் பணி, கவுந்தப்பாடி தம்பிக்கலை அய்யன் கோவிலில், 26 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 51 லட்சம் ரூபாய் மதிப்பில் யானை நினைவு மண்டபம் மற்றும் 34.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணியாளர் மற்றும் செயல் அலுவலர் குடியிருப்பு மராமத்து பணிகள், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில், 60 லட்சம் மதிப்பில் மதில் சுவர் கட்டும் பணிகள் என, 4.75 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.