/உள்ளூர் செய்திகள்/சென்னை/பா.ஜ., பேனர்கள் அகற்றம் போலீசாருடன் வாக்குவாதம்பா.ஜ., பேனர்கள் அகற்றம் போலீசாருடன் வாக்குவாதம்
பா.ஜ., பேனர்கள் அகற்றம் போலீசாருடன் வாக்குவாதம்
பா.ஜ., பேனர்கள் அகற்றம் போலீசாருடன் வாக்குவாதம்
பா.ஜ., பேனர்கள் அகற்றம் போலீசாருடன் வாக்குவாதம்
ADDED : பிப் 10, 2024 12:21 AM
ஆவடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' எனும் பெயரில், தமிழகத்தின் அனைத்து தொகுதியிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில், நேற்று மாலை இந்த நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அண்ணாமலையை வரவேற்கும் விதமாக, ஆவடி செக்போஸ்ட் முதல் ஆவடி மாநகராட்சி அலுவலகம் வரை, 100க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பலர் புகார் அளித்தனர். சமூக ஆர்வலர்கள், 'எக்ஸ்' வலைதளத்திலும் இது குறித்து பதிவிட்டனர்.
இதனால், பேனர்களை அப்புறப்படுத்தக்கோரி, காவல் துறையினர் பா.ஜ.,வினரிடம் கூறினர். பேனர்களை அகற்ற மறுத்து, காவல் துறையினரோடு பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆவடி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் பா.ஜ., தலைவர் அஸ்வின் குமாரை கைது செய்து, தன் வாகனத்திற்குள் வைத்து பேச்சு நடத்தினார். பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து, பேனர்களை அகற்றும் பணியின் ஈடுபட்டனர்.