விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2024 05:46 AM
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (11ம் தேதி ) நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நடேசன் நகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ேஹாமம், தன பூஜை, மதியம் 12:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
இன்று மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்பலங்காரம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை (11ம் தேதி ) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், 9:45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 10:10க்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.