/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்
ADDED : பிப் 09, 2024 10:53 PM

குன்றத்துார்:குன்றத்துார் - --குமணன்சாவடி நெடுஞ்சாலையை பயன்படுத்தி பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், குன்றத்துார், பல்லாவரம்,தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் வாகன நெரிசலால், ஏற்கனவே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், குமணன்சாவடி, மாங்காடு, சிங்கராயபுரம், கொழுமணிவாக்கம், கொல்லச்சேரி, குன்றத்துார் ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள காலி நிலம், கட்டடங்கள் மீது 'மெகா சைஸ்' விளம்பரபேனர்கள், அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.
பேனர்களில் உள்ள வாசகங்கள், கண்கவர் படங்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
பல இடங்களில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.