Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது

மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது

மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது

மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது

ADDED : பிப் 09, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடமணிப்பாக்கம் அடுத்த வடக்குப்புத்துார் ஏரியில் மண் கடத்துவதாக, நேற்று மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அப்பகுதிக்குச் சென்ற போலீசார், மண் கடத்தலில் ஈடுபட்ட மண் ஏற்றிய லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த ஒரத்தி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒரத்தி அருகே எட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மண் லாரி ஓட்டுனர் கண்ணன், 34, வடமணிப்பாக்கம் ஊராட்சி தலைவியின் கணவர் வடிவேல், 45, என தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒரத்தி போலீசார், இருவரையும் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us