/உள்ளூர் செய்திகள்/சென்னை/அபாயகர நீர்த்தேக்க தொட்டி திருவொற்றியூரில் அதிர்ச்சிஅபாயகர நீர்த்தேக்க தொட்டி திருவொற்றியூரில் அதிர்ச்சி
அபாயகர நீர்த்தேக்க தொட்டி திருவொற்றியூரில் அதிர்ச்சி
அபாயகர நீர்த்தேக்க தொட்டி திருவொற்றியூரில் அதிர்ச்சி
அபாயகர நீர்த்தேக்க தொட்டி திருவொற்றியூரில் அதிர்ச்சி
ADDED : பிப் 10, 2024 12:19 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் 14வது வார்டு, தியாகராயபுரம் குடிநீரேற்று நிலையத்தில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இங்கிருந்து 20,000 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், குடிநீரின் தரம் குறித்து, புகார்கள் எழுந்தன. நேற்று காலை, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, குடிநீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்வதற்கான, கான்கிரீட் படிக்கட்டுகள் சேதமடைந்திருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
அதேபோல், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில், குளோரின் பவுடர் சரிவிகிதத்தில் கலக்காமல் அளவிற்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, திருவொற்றியூர் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, மண்டல குழு தலைவர் போனில் தொடர்பு கொண்டு, பராமரிப்பு பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் இருப்பதாகவும், குடிநீர் குறித்த பிரச்னையை உடனடியாக சரி செய்வதாகவும் கூறினர்.
படிக்கட்டே இல்லாமல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது எப்படி என, கேள்வி எழுப்பிய மண்டல குழு தலைவர், உடனடியாக அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்ய வேண்டும் என கோரினார்.