/உள்ளூர் செய்திகள்/தேனி/தை அமாவாசையில் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடுதை அமாவாசையில் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு
தை அமாவாசையில் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு
தை அமாவாசையில் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு
தை அமாவாசையில் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு
ADDED : பிப் 10, 2024 05:41 AM

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரை, சுருளி, வராக நதி வைகை ஆறு ஆகிய நீர் நிலைகளில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
வீரபாண்டி முல்லைப் பெரியாறு கரை, கண்ணீஸ்வரமுடையார் கோயில் வளாகத்தில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிதது காணப்பட்டது. அங்கு ஆற்றில் குளித்த மக்கள் புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின் ஏழைகளுக்கும், சாதுக்களுக்கு அன்னம், உடைதானம் வழங்கினர். கால்நடைகளுக்கு கீரை, பழங்கள் வழங்கி வழிபட்டனர்.
ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இக்கோயிலில் தை, ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மருத மரங்களின் வேர்ப் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீராடி வேலப்பர் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு விபூதி, மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, வடை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது.
கம்பம்: சுருளி அருவி, ஆறுகளில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து பூதநாராயண சுவாமி , சுருளி வேலப்பர், ஆதி அண்ணாமலையார், கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் அன்னதானத்தை துவக்கி வைத்தார். திராளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
போடி: - பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
மரக்காமலை சன்னாசிராயர் கோயிலில் சன்னாசி ராயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சன்னாசிராயரின் தரிசனம் பெற்றனர். பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.