தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு
தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு
தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க பொதுநல வழக்கு
ADDED : ஜூலை 17, 2011 01:13 AM

மதுரை : மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள டோல் கேட்டில் தினமும் ரூ. 10 லட்சம் சுங்கவரி கிடைக்கிறது. ஆனால் அதற்கேற்ப தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ரோட்டை பராமரிப்பதில்லை. இதனால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இணைப்பு ரோடுகளில் விளக்கு வசதி இல்லை. முறையான அணுகுசாலைகளும் கிடையாது. இக்குறைகளை களைய, கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி, இந்திய தேசிய ஆணையத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையில் தரத்தை மேம்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனுதாரர் சார்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். நீதிபதிகள் ஜனார்த்தன ரெட்டி, சுந்தரேஷ் ஆகியோரை கொண்ட பெஞ்ச், மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.