Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

Latest Tamil News
திருச்சி: '' தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன.

அலட்சியமே காரணம்

மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழக அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. குற்றங்கள் அதிகரிப்பதற்கு அரசின் அலட்சியமே காரணம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கை ஆகும்.

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக சென்னையில் நடந்த பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1 வருடம் இருக்குது

திருச்சியில் இன்று நடைபெறும். பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜ., கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும். தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

நயினார் 'நச்' பதில்!

நிருபர்: தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியில் ஏதும் தேசிய பொறுப்பு கொடுக்க வாய்ப்புள்ளதா?

நயினார் நாகேந்திரன் பதில்: அது கொடுப்பாங்க, உடனே ஏதும் கொடுக்காவிட்டாலும்,ஏதாவது பதவி கொடுப்பார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us