/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஊராட்சி தலைவி கணவர் மண் கடத்தலில் கைதுஊராட்சி தலைவி கணவர் மண் கடத்தலில் கைது
ஊராட்சி தலைவி கணவர் மண் கடத்தலில் கைது
ஊராட்சி தலைவி கணவர் மண் கடத்தலில் கைது
ஊராட்சி தலைவி கணவர் மண் கடத்தலில் கைது
ADDED : பிப் 10, 2024 12:12 AM

அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வடமணிப்பாக்கம் அடுத்த வடக்குப்புத்துார்.
இந்த ஊரின் ஏரியில் மண் கடத்துவதாக, மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு நேற்று, ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, அப்பகுதிக்குச் சென்ற போலீசார், மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை, பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மண் கடத்தலில் ஈடுபட்டோரை கைது செய்தனர்.
ஒரத்தி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மண் கடத்தலில் ஈடுபட்டது, ஒரத்தி அருகே எட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மண் லாரி ஓட்டுனர் கண்ணன், 34, வடமணிப்பாக்கம் ஊராட்சி தலைவியின் கணவர் வடிவேல், 45, என்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒரத்தி போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.