/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/படிப்பில் மட்டுமே இருக்கணும் கவனம்: டிவி., மொபைல் போன் எல்லாம் அப்புறம்படிப்பில் மட்டுமே இருக்கணும் கவனம்: டிவி., மொபைல் போன் எல்லாம் அப்புறம்
படிப்பில் மட்டுமே இருக்கணும் கவனம்: டிவி., மொபைல் போன் எல்லாம் அப்புறம்
படிப்பில் மட்டுமே இருக்கணும் கவனம்: டிவி., மொபைல் போன் எல்லாம் அப்புறம்
படிப்பில் மட்டுமே இருக்கணும் கவனம்: டிவி., மொபைல் போன் எல்லாம் அப்புறம்
ADDED : பிப் 09, 2024 11:04 PM

மேட்டுப்பாளையம்:''தேர்வு நேரம் வருவதால், மாணவ, மாணவியர், தொலைக்காட்சி, மொபைல் போனில் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்,'' என, ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.
சிறுமுகை அருகே ஆலாங்கொம்பில், அழகிரி சுரேஷ் அரசு உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனா வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் அமல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, பரிசு வழங்கி பேசியதாவது: இப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு காரணமாக உள்ள ஆசிரியர்களை பாராட்டுகிறேன். தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்கள் தொலைக்காட்சி, மொபைல் போனில் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். படிப்பில் முழு கவனம் செலுத்தவேண்டும். பெற்றோருக்கும், ஊருக்கும், இந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். உரிய காலத்தில் தங்களுடைய குழந்தைகளுக்கு என்னென்ன செய்து கொடுக்க முடியுமோ அவற்றை, பெற்றோர் செய்து கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம், எதிர் மறையாக பேச வேண்டாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் துரைசாமி உட்பட பலர் பேசினர். பி.டி.ஏ., துணைத் தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கணித ஆசிரியை சண்முகவடிவு நன்றி கூறினார்.