Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி முதல்வர்களுக்கு பணி நீட்டிப்பு தர எதிர்ப்பு

கல்லுாரி முதல்வர்களுக்கு பணி நீட்டிப்பு தர எதிர்ப்பு

கல்லுாரி முதல்வர்களுக்கு பணி நீட்டிப்பு தர எதிர்ப்பு

கல்லுாரி முதல்வர்களுக்கு பணி நீட்டிப்பு தர எதிர்ப்பு

UPDATED : பிப் 10, 2024 12:00 AMADDED : பிப் 10, 2024 09:34 AM


Google News
சென்னை:
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 60 வயது நிறைந்த முதல்வர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல், விதிப்படி ஓய்வு கொடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள் அமைப்பு தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகத்துக்கு, ஏ.யூ.டி., எனப்படும், பல்கலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் சரவணன் அனுப்பியுள்ள கடிதம்:
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் சில முதல்வர்கள், 60 வயது நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்லுாரி நிர்வாக செலவில், இந்த பணி நீட்டிப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது, முற்றிலும் தவறான முன் உதாரணம். தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில், 60 வயது வரை மட்டுமே, அரசு பணியில் நீடிக்க முடியும்.இந்நிலையில், பிற ஆசிரியர்களின் பதவி உயர்வை தடுக்கும் வகையிலும், புதிய நியமனங்கள் தடைபடும் வகையிலும், பணி நீட்டிப்பு கேட்பது சமூக அநீதி. இந்த விவகாரத்தில், 60 வயது நிறைந்தவர்களுக்கு எந்த காரணம் கொண்டும், பணி நீட்டிப்பு வழங்குவதை, கல்லுாரி கல்வி இயக்குனர், உயர் கல்வி செயலர் ஆகியோர் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us