பொ.மல்லாபுரத்தில் பள்ளி ஆண்டு விழா
பொ.மல்லாபுரத்தில் பள்ளி ஆண்டு விழா
பொ.மல்லாபுரத்தில் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 10, 2024 07:54 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா, தலைமை ஆசிரியை சி.வளர்மதி தலைமையில் நடந்தது.
ஆசிரியை இளங்கனி வரவேற்றார். உதவி ஆசிரியை அ.வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் பழனி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் எழிலரசி, ஆகியோர் பேசினர். விழாவில், மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர் பயிற்றுனர் செண்பகவள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவி அசினா, கவுன்சிலர் மகேஸ்வரி, ஆசிரியர்கள் சுகுணா, சித்ரா, அசினாபானு, மங்கம்மாள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.