/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பஸ்கள் பயங்கர மோதல்திருச்சி அருகே 2 பேர் பலிபஸ்கள் பயங்கர மோதல்திருச்சி அருகே 2 பேர் பலி
பஸ்கள் பயங்கர மோதல்திருச்சி அருகே 2 பேர் பலி
பஸ்கள் பயங்கர மோதல்திருச்சி அருகே 2 பேர் பலி
பஸ்கள் பயங்கர மோதல்திருச்சி அருகே 2 பேர் பலி
ADDED : ஜூலை 17, 2011 01:06 AM
மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதிய
விபத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் பலியாயினர்.
இவ்விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த 37 பேர் படுகாயம்
அடைந்தனர்.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அஜீத் டிராவல்ஸ் என்ற
தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் கிளம்பியது. பஸ்ஸை நெல்லையை சேர்ந்த
ராஜன் (32) என்பவர் ஓட்டினார்.திருச்சியை அடுத்த சமயபுரம் பள்ளிவிடை அருகே
நள்ளிரவு ஒரு மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின்
நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி இடதுபுறம் சென்றது.எதிரே வந்த,
புதுச்சேரியில் இருந்து பழனிக்கு சுற்றுலா சென்ற கார்த்திகேயன் என்ற
டூரிஸ்ட் பஸ் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இரண்டு பஸ்களும் சாலையில்
இருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.விபத்தில், புதுச்சேரியை சேர்ந்த
சுபாஷிணி (22), குரும்பாபேட்டையை சேர்ந்த திலீப் பரத் (12) இருவரும் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர். புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ், மஞ்சுளா, லட்சுமி,
கல்யாணி, ஸ்ரீதர் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.தூத்துக்குடியில் இருந்து
சென்னை சென்ற ஆம்னி பஸ்ஸில் ஒரு சிலருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது.
சமயபுரம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம், எஸ்.ஐ., ராஜ்குமார் விபத்தில்
சிக்கியவர்களை மீட்டனர். திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.