ADDED : பிப் 10, 2024 05:37 AM
வடமதுரை: காணப்பாடி குரும்பபட்டி,புதுப்பட்டி பகுதிகளில் வடமதுரை எஸ்.ஐ.,க்கள் சித்திக், அங்கமுத்து ரோந்து சென்றனர்.
மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வேம்பார்பட்டி சசிக்குமார் 33, புதுப்பட்டி பவுன் தாய் 60, சிங்காரக்கோட்டை சுந்தரம் 48 ,ஆகியோரை கைது செய்தனர். 65 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.