ADDED : பிப் 10, 2024 05:46 AM
விருத்தாசலம்: மனநலம் பாதித்த கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் புதுக்குப்பம் மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 48. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ரமேஷை தேடி வருகின்றனர்.