Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எம்.ஜி.ஆரை விமர்சித்தால் டிபாசிட் காலி: பழனிசாமி சாபம் ராஜாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்

எம்.ஜி.ஆரை விமர்சித்தால் டிபாசிட் காலி: பழனிசாமி சாபம் ராஜாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்

எம்.ஜி.ஆரை விமர்சித்தால் டிபாசிட் காலி: பழனிசாமி சாபம் ராஜாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்

எம்.ஜி.ஆரை விமர்சித்தால் டிபாசிட் காலி: பழனிசாமி சாபம் ராஜாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்

ADDED : பிப் 10, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:''தி.மு.க., - எம்.பி., ராஜாவை லோக்சபா தேர்தலில் டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து தவறாகவிமர்சித்தால், இது தான் தண்டனை என்பதை அவர்உணர வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

எம்.ஜி.ஆர்., குறித்து விமர்சித்த நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதரை, ராஜா தரக்குறைவாக பேசியதை மக்கள் ஏற்கமாட்டர். சில தலைவர்கள் தன் மக்களுக்காகவாழ்ந்தனர்; அப்படிப்பட்டவர்களில் எம்.ஜி.ஆர்., முதன்மையானவர்.'வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்' என்பதுபோல, மக்கள் வெகுண்டெழுந்தால், ராஜாவால் தாக்குப்பிடிக்க முடியாது.

கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்தது. 'எங்கள் தங்கம்' என்ற திரைப்படத்தில், எம்.ஜி.ஆர்., -ஜெயலலிதா சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்து, கருணாநிதி குடும்ப கடனை அடைத்தனர்.

கடந்த, 1967 தேர்தலில், எம்.ஜி.ஆர்., முகம் காட்டியதால் மட்டுமே தி.மு.க., ஆட்சிக்கு வர முடிந்தது. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் இந்த ராஜா.

வரும் லோக்சபா தேர்தலில், ராஜாவை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து தவறாக விமர்சனம் செய்தால், இது தான் தண்டனை என்பதை ராஜா உணர வேண்டும்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என, ஜெ., அறிவித்தார். அவர் மறைந்தாலும், 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநில நிதியை மட்டும் ஒதுக்கி, 90 சதவீதம் திட்ட பணிகளை நிறைவேற்றினோம்.

தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, 10 சதவீதம் பணிகள் மட்டும் பாக்கியிருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது என்பதால், திட்டத்தையே முடக்கி உள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; குற்றச்செயல் அதிகரித்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலின்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.

இவ்வாறு, பழனிசாமி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us