/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜைபள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை
ADDED : பிப் 09, 2024 11:25 PM

அவலுார்பேட்டை : மேல்மலையனுாார் பகுதியில் 48.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நாடக மேடை, பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த செவலபுரை, அன்னமங்கலம் கிராமங்களில் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., நிதியின் கீழ் தலா 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நாடக மேடை கட்டுவதற்கும், தாதிகுளத்தில் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி சேர்மன் மொக்தியார், அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமது கிராம மக்கள் பங்கேற்றனர்.