அனைத்திலும் கோலோச்சி வரும் மொழி தமிழ்: முதல்வர் ஸ்டாலின்
அனைத்திலும் கோலோச்சி வரும் மொழி தமிழ்: முதல்வர் ஸ்டாலின்
அனைத்திலும் கோலோச்சி வரும் மொழி தமிழ்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : பிப் 10, 2024 07:27 PM

சென்னை: ஓலைச்சுவடி காலம் முதல் ஆன்ட்ராய்டு காலம் வரையில் அனைத்திலும் கோலோச்சி வரும் மொழி தமிழ் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
பன்னாட்டு கணினித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வாசித்தார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து உரையில் தெரிவித்து இருப்பதாவது: இளைய தலைமுறையினர் அனைத்து தகவல் மற்றும் தொழில் நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உலகில் மொழி தொழில் நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன்முறையாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு தான். துறை தோறும் தமிழ் தொண்டு ஆற்றுவோம். தமிழை புத்தொளி பெற வைப்போம்.தொல்லியலையும் தொழில் நுட்பத்தையும் ஒரு சேர பற்றி நிற்போம்.
செயற்கை நுண்ணறிவு பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாக பயணிக்க வைக்க வேண்டும். தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ்மொழி தகவமைக்கப்பட வேண்டும். அடுத்து வரும் எந்த காலத்திற்கும் தமிழை நிலைநிறுத்தும் முயற்சியே கணித்தமிழ் மாநாடு.
ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருள் வரும் போதே தமிழுக்கும் மென்பொருள் வந்தாக வேண்டும்.தகவல் தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் கிடைக்க மாநில அரசு ஆவண செய்யும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் மொழி சார்ந்த வளம் மற்றும் வழிகாட்டுதல்களை மாநில அரசு வழங்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து உரையில் தெரிவித்து உள்ளார்.