/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேசிய வேளாண் சந்தை திட்டம் ;விவசாயிகளுக்கு விழிப்புணர்வுதேசிய வேளாண் சந்தை திட்டம் ;விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தேசிய வேளாண் சந்தை திட்டம் ;விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தேசிய வேளாண் சந்தை திட்டம் ;விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தேசிய வேளாண் சந்தை திட்டம் ;விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 09, 2024 11:50 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்வராஜ், அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேளாண் உதவி அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்கவும், ஏல முறையில் விற்பனை செய்யவும் விற்பனை கூடத்தை பயன்படுத்தலாம்.
'இ - நாம்' திட்டம், பொருளீட்டு கடன், பண்ணை வயல் திட்டம் மற்றும் பரிவர்த்தனை குறித்து பேசினார். இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
அமிர்தா கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளிடம், தேனீ வளர்ப்பு முறை, காளான் வளர்ப்பு மற்றும் மஞ்சள் சாகுபடி போன்றவைகளின் நன்மைகள், வளர்ப்பு முறைகள் பற்றி தெரிவித்தனர்.
வேளாண் உதவி அலுவலர் சுந்தர்ராஜன், வேளாண் உட்கட்டமைப்பு, உழவர் சந்தை நல திட்டம், உணவு பொருள் பதப்படுத்துதல் மற்றும் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் பற்றி விரிவாக விவசாயிகளிடம் பேசினார்.