மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர் ஒருங்கிணைய சபாநாயகர் அறிவுரை
மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர் ஒருங்கிணைய சபாநாயகர் அறிவுரை
மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர் ஒருங்கிணைய சபாநாயகர் அறிவுரை
ADDED : பிப் 10, 2024 06:25 AM
பெங்களூரு: ''சமுதாயத்தின் நலனுக்காக, ஊடகத்தினர், மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்,'' என சபாநாயகர் காதர் அறிவுரை கூறினார்.
மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகத்தினருக்கு, நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில் சபாநாயகர் காதர் பேசியதாவது:
ஊடகத்தினர் இல்லாமல், மக்கள் பிரதிநிதிகள் இல்லை; மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஊடகத்தினர் இல்லை. சமுதாயத்தின் நலனுக்காக, இருவரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க வேண்டும். எது அவசியம் என்பதை அறிந்து பேச வேண்டும். தேவையற்ற விஷயங்களை பேசி, கூட்டத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள். விவாதங்கள் சிந்தனைக்கு உரியவைகளாக இருக்க வேண்டும்.
விளம்பரங்களை விட, சமூக நன்மைக்கு தேவையான விஷயங்களுக்கு, ஊடகத்தினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பேசியதாவது:
விதிகளை படித்துவிட்டு, தயாராக சபைக்கு வந்தால், அரசை நெருக்கடியில் சிக்க வைக்கலாம். தொகுதிக்கு நல்லது செய்யலாம். எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், சபையில் பங்கேற்பது மட்டுமின்றி, ஒரு டைரி வைத்துக்கொண்டு குறிப்பெழுத வேண்டும்.
எப்படி கேள்வி எழுப்புவது, பதிலை பெறுவது எப்படி என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபை சிறப்பான நுாலகம் உள்ளது. இங்கு உலகின் அனைத்து விதமான புத்தகங்கள், சட்டசபை, மேலவையின் செயல்பாடு புத்தகங்களும் உள்ளன. இவற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.